ராகுல்: மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர்களின் கையில் இந்தியா

ராகுல்: மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர்களின் கையில் இந்தியா

1 mins read

புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிக நெருக்கமான 15லிருந்து 20 தொழிலதிபர்கள்தான் இந்தியாவை ஆட்சி செய்கின்றனர் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார். ஏழைகளிடமிருந்து பணத்தைப் பிடுங்கி இந்தத் தொழிலதிபர்களிடம் கொடுப்பதற்காகவே பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்திருப்பதாக ராகுல் காந்தி கூறினார். பழைய நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுகளைப் பெற வங்கிகளுக்கு முன் சாதாரண மக்கள்தான் வரிசையில் நிற்கின்றனர் என்றும் மோடியின் நண்பர்கள் யாரும் நிற்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.