புதுடெல்லி: டெல்லியிலும் ஹரியானாவிலும் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4ஆக பதிவானது. இந்திய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணி அளவில் டெல்லி- ஹரியானா எல்லையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரி விக்கப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக மரணம் அடைந்தோர் பற்றியோ ஏற்பட்ட சேதங்கள் குறித்தோ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
டெல்லி, ஹரியானா நிலநடுக்கம்
1 mins read

