புதுடெல்லி: ரூ.500, ரூ. 1,000 செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் கீழ் நீதி மன்றம், உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக் களுக்குத் தடை விதிக்க முடியாது என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. "இந்த அளவுக்குப் பிரச் சினைகள் எழும்போது நாங்கள் எப்படி கதவுகளை அடைத்து வைக்க முடியும்?" என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் தலைமை யிலான அமர்வு முன்பு நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, "மக்கள் பணத்தைத் தேடி அலைகின்றனர், மணிக் கணக்காக வரிசையில் காத்திருக் கின்றனர்.

