போலி 2,000 ரூபாய் நோட்டைக் கொடுத்து சாக்லேட் வாங்கிச் சென்ற பள்ளிக் குழந்தைகள்

போலி 2,000 ரூபாய் நோட்டைக் கொடுத்து சாக்லேட் வாங்கிச் சென்ற பள்ளிக் குழந்தைகள்

1 mins read

இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக வெளியிட்டுள்ள 2,000 ரூபாய் நோட்டை வண்ண நகலெடுத்து, அதைக் கடைக்காரரிடம் தந்து பள்ளிக் குழந்தைகள் நால்வர் சாக்லேட்டும் பாலும் வாங்கி ஏமாற் றிய சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்திருக்கிறது. ஷாஜாப்பூரில் கோபாலகிருஷ்ண யாதவ் என்பவரின் கடைக்கு நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் அந்தப் பள்ளிப் பிள் ளைகள் சென்றனர். தங்களிடம் இருந்த 'புதிய' 2,000 ரூபாய் நோட்டை யாதவிடம் தந்த அவர்கள் 200 ரூபாய்க்குப் பாலும் மிட்டாயும் வாங்கினர். பின் ரூ.1,800 மீதப் பணத்தை வாங்கிக்கொண்ட அவர்கள் அப்பாவிகள்போல நடை யைக் கட்டினர்.