முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம்

முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம்

1 mins read

சென்னை: முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போலோ மருத்துவமனை நிபுணர் குழுவினர் அவருக்கு 58ஆவது நாளாக தொடர்ந்து தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். முன்னதாக அவர் வீடு திரும்பலாம் என்று தகவல் வெளியானது. ஆனால் அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பின்னர் வெளியான தகவல் தெரிவித்தது.