வங்கியில் பணம் போட்டவர்களிடம் விளக்கம் கேட்கத் தொடங்கியது வருமான வரித்துறை

வங்கியில் பணம் போட்டவர்களிடம் விளக்கம் கேட்கத் தொடங்கியது வருமான வரித்துறை

1 mins read

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர் 500, 1,000 ரூபாய் நோட்டு களைப் பெருமளவில் வங்கியில் செலுத்தியவர்களிடம் இந்திய வருமான வரித் துறை விளக்கம் கேட்கத் தொடங்கி உள்ளது. கறுப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இம் மாதம் 8ஆம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். இதனை அடுத்து பொதுமக்கள் தங்களிடம் இருந்த பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுகளை பெற்றுவருகின்றனர். முதலில் 4,500 ரூபாய் வரை மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யப் பட்டு வந்த நிலையில் சில தினங் களுக்கு முன் அது 2,000 ரூபா யாகக் குறைக்கப்பட்டது. மேலும் பலர் தங்களிடம் இருப்பு இருந்த பழைய நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்தி வருகின்றனர்.