ஏடிஎம் இயந்திரத்துக்கு மாலை அணிவித்துப் போராட்டம்

ஏடிஎம் இயந்திரத்துக்கு மாலை அணிவித்துப் போராட்டம்

1 mins read
2ba1713b-57e0-49d2-8e42-9edd11ea45c7
-

விருத்தாசலம்: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பப்படா ததைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் மாற்றுத்திறனாளிகள் சங்கமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் விருத்தாசலத்தில் பரபரப்பு நிலவியது. இச்சமயம் ஏடிஎம் இயந்திரம் முன்னர் திரண்ட இச்சங்கத்தினர், கண்டன முழக் கங்கள் எழுப்பினர். இதையடுத்து அந்த இயந்திரத்துக்கு ஆள் உயர மாலை அணிவித்து, சங்கு ஊதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்து விரைந்து வந்த விருத்தாசலம் போலிசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானப்படுத்திக் கலைந்து போக வைத்தனர்.