விருதுநகர்: வழிப்பறித் திருடனிடம் இருந்து வேலூர் காவல்துறையினர் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, காரை பறிமுதல் செய்துள்ளனர். இருபத்து ஐந்து வயதான குணா என்ற அந்நபர் வேலூரிலும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீண்ட நாட்களாக வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். எனினும் போலிசாரிடம் பிடிபடவில்லை. இந்நிலையில், வாணியம்பாடி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தரம் தலைமையிலான நாட்றம்பள்ளி போலிசார் நேற்று முன்தினம் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தகரகுப்பம் பகுதியில் காருடன் நின்றிருந்த குணாவை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது அவன் சிக்கினான்.
காருடன் சிக்கிய வழிப்பறித் திருடன்
1 mins read

