செல்லாத நோட்டுகளால் பாதிப்பு: திருப்பூரில் கடையடைப்புப் போராட்டம்

செல்லாத நோட்டுகளால் பாதிப்பு: திருப்பூரில் கடையடைப்புப் போராட்டம்

1 mins read

திருப்பூர்: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பைக் கண்டித்தும் அந்த ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ஆம் தேதி வரை பயன்படுத்த அனுமதிக்க வலியுறுத்தியும், திருப்பூரில் நேற்று ஒரு நாள் கடையடைப்பு, வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இச்சமயம் அரசுப் பேருந்துகள் மீது சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடையடைப்புக்கு அழைப்பு விடுத்த நிலையிலும் பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டிருந்தது, அரசுப் பேருந்துகளும் வழக்கம்போல இயங்கின. இதனால் ஆவேசமடைந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிலர் பேருந்துகளை கற்களால் தாக்கினர். இதில் 3 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் சேதமடைந்தன.