இலங்கை: தமிழர் பகுதியில் வளர்ந்துவரும் வன்முறைக் கும்பல் பற்றிய சர்ச்சை

இலங்கை: தமிழர் பகுதியில் வளர்ந்துவரும் வன்முறைக் கும்பல் பற்றிய சர்ச்சை

2 mins read
5ecef4c3-374e-4e1d-b870-51f888dbc695
-

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வாளேந்தி வன்முறையில் ஈடுபடும் 'ஆவா' குழு பற்றி இப்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அந்தக் குழுவைச் சேர்ந்தோர் எங்கிருந்தாலும் அவர் கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அல்லது எந்தவொரு சட்டத்தையாவது பயன்படுத்தி கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்று இலங்கை சுகாதார அமைச்சர் ரஜித சேனரத்ன அண்மையில் மிரட்டி இருந்தார். 'ஆவா' வன்செயல் குழுவுக்கு தமிழர்களின் ஆதரவு இருப்பதை மறைமுகமாகக் குறிப்பிட்ட அவர், வட பகுதியை ஆயுதமேந்தி வன் முறையால் சீரழிப்போர் யார் என்பதும் அவர்களின் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதும் அர சாங்கத்துக்குத் தெரியும் என்றார்.

தேசிய பாதுகாப்புக்கு சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகக் கூக்குரல் போடுவோர்தான் இந்த ஆயுதக் குழுவை வளர்த்து வருகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார். வவுனியாவில் செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர் சேன ரத்ன, வடக்கு மாகாண மன்றத் துக்கான அதிகாரப்பகிர்வும் அந்த மன்றத்தைப் பலப்படுத்து வதும் கட்டம் கட்டமாகத்தான் நடைபெறும். அதுவரை அந்த மாகாணத்தைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு மன்றத்துக்கு உண்டு என்றார்.

'ஆவா' வன்செயல் குழுவுக்கு தமிழர்களின் ஆதரவு இருப்பதை மறைமுகமாகக் குறிப்பிட்ட அவர், வட பகுதியை ஆயுதமேந்தி வன் முறையால் சீரழிப்போர் யார் என் பதும் அவர்களின் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதும் அர சாங்கத்துக்குத் தெரியும் என்றார். தேசிய பாதுகாப்புக்கு சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகக் கூக்குரல் போடுவோர்தான் இந்த ஆயுதக் குழுவை வளர்த்து வருகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார். வவுனியாவில் செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர் சேன ரத்ன, வடக்கு மாகாண மன்றத் துக்கான அதிகாரப்பகிர்வும் அந்த மன்றத்தைப் பலப்படுத்து வதும் கட்டம் கட்டமாகத்தான் நடைபெறும். அதுவரை அந்த மாகாணத்தைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு மன்றத்துக்கு உண்டு என்றார். அமைச்சரின் கூற்றுக்குப் பதிலளிக்கும் விதமாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி-. விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் சில தகவல்களை வெளியிட்டார். வடக்குப் பகுதியில் ஆவா என்று தங்களுக்குத் தாங்களே பெயர் சூட்டிக்கொண்டு இயங் கும் குண்டர்களுக்கு ராணுவத் தின் உதவி இருக்கிறது என்றும் இந்த விவகாரத்தில் அரசியல் கலந்திருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். மேலும், தமிழ்ச் சமு தாயத்தைச் சேர்ந்தோர் எவராலும் அந்தக் குழு ஆதரிக்கப்படவில்லை என்றார். தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி விவரிக்க உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் மன்றத்தின் சார் பாக தாம் பேசிக்கொண்டு இருப் பதாக கொழும்பு நகரில் செய்தி யாளர்களிடம் திரு விக்னேஸ் வரன் தெரிவித்தார்.