சென்னை: பண மோசடி வழக்கில் சிக்கி கைதாகி உள்ள வேந்தர் மூவீஸ் நிறுவன அதிபர் மதனுக்கு நிறைய மனைவிகள் இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த மே மாதம் திடீரென மாயமான அவர், அண்மையில் திருப்பூரில் வைத்து கைது செய்யப்பட்டார். தனியார் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் அவர் ரூ.95 கோடி வரை பணம் வசூலித்து மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.
மதனிடம் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல பெண்களை அவர் தனது காதல் வலையில் வீழ்த்தி, திருமணமும் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. தற்போது 45 வயதான மதன், பள்ளியில் படித்தபோதே கேர ளாவைச் சேர்ந்த சிந்து என்ற பெண்ணைக் காதலித்து, பின்னர் பட்டப்படிப்பை முடித்ததும் பெற் றோர் எதிர்ப்பையும் மீறி 1996ல் திருமணம் செய்துள்ளார். "தனியார் மருத்துவக் கல்லூரி யில் வட மாநில மாணவ மாண வியரை சேர்த்துவிடும் தரகராகச் செயல்பட்டதில் பணம் குவிந்த தால், வேந்தர் மூவீஸ் நிறுவ னத்தை தொடங்கியுள்ளார் மதன். அப்போது தொலைக்காட்சி நடிகை சுமலதா நடிக்க வாய்ப்பு கேட்டு அணுக, அவருடன் நெருக்கமானார். பின்னர் இருவ ரும் சில எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து கொண்டனர்.
மதனின் தாயார் தங்கமும், இரண்டாவது மனைவி சுமலதாவும் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அவர்களது வழக்கறிஞர் இன்பென்ட் தினேஷ் உடன் இருந்தார். படம்: ஊடகம்

