125 கோடி மக்களை வாட்டி வதைக்கிறது மத்திய அரசு: திருமாவளவன் குற்றச்சாட்டு

125 கோடி மக்களை வாட்டி வதைக்கிறது மத்திய அரசு: திருமாவளவன் குற்றச்சாட்டு

1 mins read

சென்னை: ரூ.500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்து 125 கோடி மக்களை மத்திய அரசு வாட்டி வதைப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டினார். நடந்து முடிந்த மூன்று தொகுதி களுக்கான தேர்தலில் அதிமுக பெற்றது பெரிய வெற்றி அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வெற்றி எப்படி கிடைத்தது என மக்களுக்குத் தெரியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், எந்தக் காரணத்திற்காக தஞ்சை, அரவக் குறிச்சி தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதோ, அதே வழியில்தான் தற்போதும் தேர்தல் நடந்துள்ளதாக விமர்சித்துள்ளார். "இந்தியாவில் உள்ள கருப்பு பண முதலைகள் குறித்து மோடி அரசுக்கு தெரியாமல் இருக்காது. அவர்களை அரசு கண்டுகொள்ள வில்லை. அவர்கள் மீது உரிய நட வடிக்கைகள் எடுத்தாலே கருப்பு பணத்தை ஒழித்துவிடலாம்.