சரியாக அச்சடிக்கப்படாத ரூ. 2,000; வங்கி அதிகாரிகள் வாங்க மறுப்பு

சரியாக அச்சடிக்கப்படாத ரூ. 2,000; வங்கி அதிகாரிகள் வாங்க மறுப்பு

1 mins read
ab12e3a6-af58-46f3-bce2-f1e67ba8ebed
-

சென்னை: புதிய 2,000 ரூபாய் நோட்டுகளில் சில சரியாக அச்சிடப்படவில்லை என்ற தகவல் ஏற்கெனவே 'வாட்ஸ்அப்' மூலம் பரவி பலர் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில் அத்தகைய நோட்டுகளை வாங்க வங்கி அதிகாரிகள் மறுக்கின்றனர் என்று பொதுமக்களில் சிலர் புகார் தெரிவித்துள்ளனர். ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு புதிய 2,000 ரூபாய் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர், சத்துவாச்சாரி, காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தவர்கள் ரூ 2,000 நோட்டுகளில் சில அச்சுக்குறைபாடுகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.

2,000 என்ற எண் இருக்க வேண்டிய இடத்தில் இரண்டு பூஜ்யங்கள் மட்டுமே உள்ளன. சிலர் எடுத்த பணத்தில் 2,000 என்ற எண் பாதி அழிந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றித் தரும்படி கேட்டபோது வங்கி அதிகாரிகள் வாங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சரியாக அச்சடிக்கப்படாத நோட்டுகளை ரிசர்வ் வங்கியில்தான் மாற்ற முடியும் என்று அதிகாரிகள் கூறுவதாகச் சிலர் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே புதிய ரூ. 500 நோட்டுகளிலும் சில அச்சுக்குறைபாடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சரியாக அச்சடிக்கப்படாத ரூ. 2,000 நோட்டுகளை வங்கி அதிகாரிகள் வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. படம்: தமிழக ஊடகம்