மறைந்த தமிழக முதலமைச்சர் எம்ஜிஆரின் சொத்துகளை நிர் வகிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஒரு வர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவரது சொத்துகளை அபகரிக்க நடந்து வந்த சட்டப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்து உள்ளது. எம்ஜிஆர் மறைந்து கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவ ரது பெயரில் அமைந்துள்ள அறக் கட்டளையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு சொத்துகள் உள் ளன. அச்சொத்துகளை ராஜேந் திரன் என்பவர் நிர்வகிக்கவும் அவ ருக்குப் பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் நிர்வகிக்க வேண்டும் என்றும் எம்ஜிஆர் உயில் எழுதி வைத்திருந்தார்.
மேலும், தமது சொத்துகளின் செவிப்புலன், பார்வைத்திறன் ஆகிய வற்றில் குறைபாடுள்ளவர்களுக் காக பள்ளி ஒன்றைத் தொடங்க அவர் விருப்பம் தெரிவித்து இருந் தார். இருப்பினும், அவற்றை அடை வதில் எம்ஜிஆரின் அண்ணன் சக்கரபாணி குடும்பத்தினருக்கும் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாள் உறவினர்களுக்கும் இடை யில் போட்டி ஏற்பட்டது. அந்தப் போட்டி பின்னர் கடுமையாகி கொலை செய்யும் நிலைமைக்கு இட்டுச் சென்றது.
இவ்விவகாரத்தின் முடிவாக நேற்று முன்தினம் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், எம்ஜிஆரின் சொத்து களை ஓய்வுபெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் நிர்வகிப்பார் என்று அறிவித்தார்.
ஒரு காலத்தில் பட அதிபர்கள் படை எடுத்த எம்ஜிஆரின் ராமாவரம் தோட்ட வீட்டின் ஒரு பகுதி. படம்: தமிழக ஊடகம்

