9 பேரைத் தாக்கிய சிறுத்தைப் புலியை அடித்துக் கொன்ற கிராம மக்கள்

9 பேரைத் தாக்கிய சிறுத்தைப் புலியை அடித்துக் கொன்ற கிராம மக்கள்

1 mins read
ce20650b-e2d5-46c1-8c3e-dcb049044c73
-

அரியானா மாநிலம் குருகிராம் அருகே உள்ள மண்டவர் கிராமத்தில் சிறுத்தைப் புலி ஒன்றை கிராம மக்கள் தடிகளால் தாக்கிக்கொன்றனர் (படம்: ஊடகம்). நேற்று காலை 8.10 மணிக்குச் சிறுத்தைப் புலி ஒன்று ஊருக்குள் புகுந்து அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் தெறித்து ஓடினர். இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் வலை விரித் தும் சிறுத்தை சிக்கவில்லை. தொடர்ந்து இந்த சிறுத்தை புலி தாக்கியதில் 9 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து ஊர்மக்கள் ஒன்று கூடி கூர்மையான ஆயுதங்கள், கம்புகளால் சிறுத்தைப் புலியை வளைத்துப் பிடித்து அடித்துக் கொன்று, வீதிகளில் இழுத்துச் சென்றனர்.