முல்லை ராசபாண்டியன்: 41 தமிழ் இலக்கியங்கள் செம்பதிப்பாக வெளியீடு

முல்லை ராசபாண்டியன்: 41 தமிழ் இலக்கியங்கள் செம்பதிப்பாக வெளியீடு

1 mins read

சென்னை: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் 41 தமிழ் இலக்கியங்கள் செம்பதிப்பாக வெளியிடப்பட உள்ளது. மேலும், திருக்குறளை இருபது மொழிக ளில் மொழிபெயர்க்கும் பணியும் நடைபெற்று வருவதாக அந்நிறுவ னத்தின் பதிவாளர் முகிலை ராச பாண்டியன் தெரிவித்துள்ளார். செம்மொழி தமிழாய்வு நிறுவன மானது மத்திய மனிதவள மேம் பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனம் ஆகும். தமி ழில் உள்ள செம்மொழி இலக்கியங் களை உலகம் முழுவதும் பரப்பும் பணியை இந்நிறுவனம் மேற் கொண்டுள்ளது.

"பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, இறையனார் களவியல், முத்தொள்ளாயிரம் என 41 தமிழ் இலக்கியங்களைச் செம்பதிப்பாக வெளியிடும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். "அதாவது தொடக்கக் காலங் களில் எழுதப்பட்ட இந்த நூல்க ளின் ஏட்டுச் சுவடியில் இருந்து தான், வெவ்வேறு காலகட்டங் களில் வெவ்வேறு படைப்பாளி களால் ஏடு பிரதி எடுக்கப்பட்டு, இருபதாம் நூற்றாண்டில் அச் சேற்றப்பட்டு இன்று புழங்கி வரு கிறது. அவை அதன் மூலப் படைப்பில் இருந்து மாறுபாடுக ளுக்கு உட்பட்டிருக்கும் வாய்ப்பு இருக்கிறது," என்கிறார் முல்லை ராசபாண்டியன்.