தமிழகத்துக்குள் கேரள மாவோயிஸ்டுகள் ஊடுருவல்

தமிழகத்துக்குள் கேரள மாவோயிஸ்டுகள் ஊடுருவல்

1 mins read
6fbd30a7-5a1e-41cf-ab66-adc998d9c41f
-

கோவை: கேரள மாவோயிஸ்டுகள் தமிழகத்தில் ஊடுருவி இருக்க லாம் எனும் சந்தேகத்தின் பேரில் இரு மாநில எல்லைப் பகுதியில் தமிழக காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். குறிப்பாக பழங்குடியினர் வசிக் கும் கிராமங்களில் வீடு, வீடாக இந்தத் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அண்மையில் கேரள மாநிலம் நிலம்பூர் வனப் பகுதியில் மாவோ யிஸ்ட் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதை யடுத்து அம்மாநில போலிசார் அங்கு தேடுதல் நடவடிக்கையைத் துவங்கினர்.

அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதன் முடிவில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் 15 பேர் தப்பிவிட்டதாகவும் கேரள காவல்துறை அறிவித்தது.

வீடு வீடாகத் தேடுதல் வேட்டை நடத்தும் தமிழகப் போலிசார். படம்: தகவல் ஊடகம்