ரூ.10 நாணயம் செல்லாது என வதந்தி

ரூ.10 நாணயம் செல்லாது என வதந்தி

1 mins read
e82fc2e5-160b-4078-834b-38c368e9fa4f
-

சங்கரன்கோயில்: ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வந்தாலும் வந்தது. இப்பொழுது அதைத் தொடர்ந்து நாளும் ஒரு தலைவலி தொடர்வதாக மக்கள் பலரும் புலம்பி வருகின்றனர். நெல்லை மாவட்டம், சங்கரன்கோயிலில் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என வதந்தி பரவியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்தத் தகவல் காட்டுத் தீ போல் பரவியதால் சிறு, குறு வணிகர்கள், பெட்டிக் கடை உரிமையாளர்கள் என யாருமே பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பேருந்துகளில் அந்த நாணயத்தை வாங்க நடத்துநர்கள் மறுப்பதாகவும் மக்கள் கூறினர். ஆனால் திட்டமிட்டு யாரோ சில சமூக விரோதிகள் இந்த வதந்தியைப் பரப்பி உள்ளதாகத் தெரிகிறது.