செல்லாத நோட்டுகள்; டிசம்பர் 30க்கு மேல் அவகாசம் நீட்டிப்பு இல்லை

செல்லாத நோட்டுகள்; டிசம்பர் 30க்கு மேல் அவகாசம் நீட்டிப்பு இல்லை

1 mins read
e0b573c7-cfcb-4c67-a6bf-6a1f931a959c
-

புதுடெல்லி: வங்கிகளிலும், ரிசர்வ் வங்கி கிளைகளிலும் செல்லாத ரூபாய் நோட்டுகளை தங்களுடைய வங்கிக் கணக்கில் போடுவதற் கான அவகாசம் டிசம்பர் 30ஆம் தேதிக்குப் பின் நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மேலவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் எழுத்து மூலமாக விளக்கம் அளித்தார். "வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் போதிய ரூபாய் நோட்டுகள் இருப்பு உள்ளன," என்று அவர் தெரிவித்தார். "நூறு ரூபாய் நோட்டுகளை விநியோகிக்கும் பணிகள் ஏற் கெனவே துவங்கிவிட்டன. வங்கி களில் செல்லாத நோட்டுளை டிபாசிட் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 30க்குப் பின் நீட்டிக்கப் படாது," என்றார் அவர்.