திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவ மனையில் நேற்று அனுமதிக்கப் பட்டார். இது தொடர்பாக, "ஊட்டச் சத்து, நீர்ச்சத்து குறைபாடு களைச் சீர்செய்வதற்காக திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் குழு அவரைக் கண்காணித்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார்," என்று அம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதையடுத்து, அவரை நேரில் பார்ப்பதற்காக கழகத் தோழர்கள், நண்பர்கள், பார்வையாளர்கள் என யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று திமுக தலைமைத்துவம் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையே, நேற்றுக் காலை அங்கு சென்ற மு.க. அழகிரி, தம் தந்தையைச் சந்தித்து நலம் விசாரித்துச் சென்றார்.
மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி
1 mins read

