ஆலந்தூர்: டெல்லி மற்றும் பெங்களூருவில் நேற்று முன்தினம் காலை கடும் பனிமூட்டம் ஏற்பட்டது. மேலும், சென்னை விமான நிலைய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. இந்தக் காரணங்களால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் உள் நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் இருந்து பெங்களூரு, டெல்லி உள்பட பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய 34 விமானங்கள் 1 மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. இதே போல் மற்ற இடங்களில் இருந்து வரவேண்டிய 17 விமானங் களும் 1 மணி நேரம் வரை தாமதமாகத் தரையிறங் கின.
பனிமூட்டத்தால் 48 விமானங்கள் தாமதம்
1 mins read
-

