மொரதாபாத்: நாட்டு மக்கள் அனைவரும் ரொக்கப் பணமில்லா கொடுக்கல், வாங்கல் முறைக்கு மாற வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், மொர தாபாத்தில் நடந்த பாஜக கூட்டத் தில் பங்கேற்றுப் பேசிய அவர், 'வாட்ஸ் ஆப்'பில் பிச்சைக்காரர்களே 'ஸ்வைப் இயந்திரம்' வைத்துக் கொள்கிற நிலை உருவாகி இருப்ப தாக நகைச்சுவையுடன் குறிப்பிட் டார். வாட்ஸ் ஆப்பில் பிச்சைக்காரர்கள் ஸ்வைப் இயந்திரங்கள் பயன்படுத்து வதைப் போல் சித்திரிக்கும் காணொளி ஒன்று பரவி வருகிறது. இதைக் குறிப்பிட்டே மோடி மேற்கண்டவாறு கூறினார். "இது எந்தளவு உண்மை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தக் காணொளி வேகமாகப் பரவுகிறது. அதில் பிச்சைக்காரரி டம் ஒருவர், 'உங்களுக்கு உதவத் தான் எனக்கும் விருப்பம். ஆனால் என்னிடம் சில்லறை இல்லையே?' என்கிறார். "அதற்கு அந்தப் பிச்சைக்காரர், 'ஐயா, கவலைப்படாதீர்கள்' என்று சொல்லி, 'ஸ்வைப் இயந்திரம்' ஒன்றை அவரிடம் நீட்டி, 'டெபிட் அட்டையைக் கொடுங்கள்' என்று கேட்கிறார்," என்று பிரதமர் மோடி புன்னகையுடன் காணொளிப் பதிவு குறித்து விவரிக்க, அதைக் கேட்டு கூட்டத்தில் பங்கேற்றிருந்த மக்கள் அனைவரும் பெரிதாகச் சிரித்தனர்.
அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு இலவசமாக வழங்கப்படும் சைவ உணவை தன் கையால் பலருக்கு பரிமாறினார். படம்: ஏஎப்பி

