ஆவேசமடைந்த தொண்டர்கள், பொதுமக்களால் பரபரப்பு

ஆவேசமடைந்த தொண்டர்கள், பொதுமக்களால் பரபரப்பு

1 mins read
6617652e-1f04-4697-a184-cdb2436d3477
-

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டு இருந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த தொண்டர்களை அனுமதிக்காததால் அங்கிருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு நூற்றுக்கணக்கானோர் அதற்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த போது ஆயிரக்கணக் கான தொண்டர்கள் அவரைப் பார்க்க அப்போலோ வாசலில் கால் கடுக்க நின்றனர். ஆனால் பெரிய தலைவர்களாலேயே ஜெயலலிதாவை நேரில் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர் மறைந்த பிறகும் அவரது உடலுக்கு அருகில் சென்று அஞ்சலி செலுத்த அரசியல் தலைவர்கள், பெரும்புள்ளிகள் உள்ளிட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இத னால் பொதுமக்களும், தொண் டர்களும் ஆவேசமடைந்தனர். படம்: தகவல் ஊடகம்