ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.35 லட்சம் பழைய நோட்டுகள்

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.35 லட்சம் பழைய நோட்டுகள்

1 mins read

பாட்னா: பீகார் மாநிலத்தில் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய 500 ரூபாய் நோட்டுகளைக் காவல்துறையினர் கண்டெடுத்தனர். பீகார் மாநிலம் கயாவுக்கு வந்த 'ஜன் சதாப்தி' விரைவு ரயிலில் காவல்துறையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்தப் பைகளில் ரூ.35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் 14 மதுபான பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.