ஏழு மாடிக் கட்டடம் இடிந்து 10 பேர் பலி

ஏழு மாடிக் கட்டடம் இடிந்து 10 பேர் பலி

1 mins read
83d6999d-28d2-4373-84e9-2956b6c1a90a
-

ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் 7 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக நம்பப்படுவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. தெலுங்கானா உள்துறை அமைச்சர் என் நரசிம்மம ரெட்டி யும் மற்ற பல தலைவர்களும் அதிகாரிகளும் மீட்புப் பணி நடந்துகொண்டிருக்கும் இடத் திற்கு விரைந்துள்ளனர். ஹைதராபாத் நகரில் உள்ள நானாகிராம்குடா பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண் டிருந்த 7 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.

வியாழன் இரவு சுமார் 10.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக ஹைதராபாத் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டடம் இடிந்து விழுந்த போது அதன் 6வது மாடியில் தொழிலாளர்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். இருப் பினும் விபத்தின்போது எத்தனை பேர் கட்டடத்திற்கு உள்ளே இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இடிபாடுகளுக்கு இடையில் வேறு யாரேனும் சிக்கிக்கொண்டுள்ளனரா என்பதைத் தேடிப் பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புப் படையினர், பொதுமக்கள். படம்: ஊடகம்