டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக காற்று மாசு மீண்டும் அபாய அளவை எட்டியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித் துள்ளது. இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் புதிய திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே பனிமூட்டம் காரணமாக நேற்று 90 ரயில் கள் வருகை தாமதமாகியது. சென்னை= டெல்லி இடையே யான ரயில் சேவை பல மணி நேரம் தாமதமாகிறது. மேலும் டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய வடமாநிலங்களில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக ரயில் போக்கு வரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்லியில் விமான சேவையும் தாமத மாகியுள்ளது. படத்தில் பனி மூட்டத்தில் டெல்லி நகரம். படம்: இணையம்
டெல்லியில் கடும் பனிமூட்டம், மாசு அதிகரிப்பு: ரயில், விமானங்கள் தாமதம்
1 mins read
-

