உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வியூகமிடும் பாஜக

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வியூகமிடும் பாஜக

1 mins read
adde16f7-0661-45d9-bbd6-92efd3b85aa4
-

சென்னை: எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட் டணி அமைக்க பாஜக தலைமை விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான வியூகங்களை அக்கட்சித் தலைமை வகுத்து வருவதாகக் கூறப்படும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் மறைவால் குழப்பத்தில் உள்ள அதிமுகவின் தற்போதைய தலைமை பாஜகவுடன் கூட் டணி அமைக்க முன்வர அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே தமிழக அரசின் செயல்பாடுகளில் மத்திய அரசின் தலையீடு இருப்ப தாகப் புகார் எழுந்தது.

தமிழக அரசை நிர்பந்தப்படுத்தி மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த மோடி அரசு முயற்சிப்பதாக தமிழக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டின. "அண்மையில் அதிமுக அமைச்சர்களுக்கு நெருக்கமான வர்களின் வீடுகள் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, ஆட்டத்தை துவக்கியுள்ளனர். இதன்மூலம், அதிமுகவை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர பாஜக திட்டமிட்டு உள்ளது," என்று தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.