கோவை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவ தில் அதிமுக, திமுகவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கோவையில் பதற்றம் நிலவியது. நேற்று முன்தினம் ரத்தினகிரி பகுதியில் ஜெயலலிதாவின் பதாகை ஒன்றை வைத்து அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். இதை திமுகவினர் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக மகளிரணியினர் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். அப்போது திமுகவினரும் திரண்டு வந்து பதில் முழக்கங்களை எழுப்பவே இரு தரப்புக்கும் மத்தியில் மோதல் உண்டானது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். பின்னர் இரு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து விரைந்து வந்த போலிசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி கூட்டத்தை கலைய வைத்தனர். அங்கு போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர்
1 mins read

