2 மாவட்டங்களில் கடும் பனிமூட்டம்

2 மாவட்டங்களில் கடும் பனிமூட்டம்

1 mins read

நெல்லை: சென்னையை கனமழை புரட்டிப் போட்டுள்ள நிலையில் நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலும் கடந்த இரு தினங்களாக கடும் பனி மூட்டம் நிலவுகிறது. சாலையே தெரியாத அளவுக்குப் பனிமூட்டம் இருப்பதால் வாகனங்கள் அனைத்தும் விளக்குகளை எரியவிட்டுச் செல்கின்றன. 'கார்த்திகை மாதம் கனமழை' என்பார்கள். ஆனால் கனமழைக்குப் பதிலாக கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. "பருவநிலை மாற்றம் காரணமாக அதிக மழை அல்லது அதிக பனிப் பொழிவு நிலவக்கூடும்," என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.