தொண்டு நிறுவனம் என்ற பெயரில் பல பெண்களிடம் ரூ.33 லட்சம் மோசடி

தொண்டு நிறுவனம் என்ற பெயரில் பல பெண்களிடம் ரூ.33 லட்சம் மோசடி

1 mins read

குமரி: தொண்டு நிறுவனம் என்ற பெயரில் பல பெண்களிடம் பணம் வசூலித்து ரூ.33 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரியைச் சேர்ந்த சோபிராஜன், திருச்சியில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் செல்வராஜ் ஆகிய இருவரும் பெண்களுக்கு என தங்களிடம் பல வளர்ச்சி திட்டங்கள் இருப்பதாகவும் தங்கள் தொண்டு நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறைந்த வட்டிக்கு பணமும் ரூ.4 லட்சத்தில் வீடும் கட்டித் தரப்படும் என்று கூறியதாகவும் தெரிகிறது. இதை நம்பி திண்டுக்கல், திருச்சி பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இத்தொண்டு நிறுவனங்களில் ரூ.1,500 வீதம் செலுத்தியுள்ளனர். எனினும், யாருக்குமே கடனோ அல்லது வீடோ கிடைக்கவில்லை. இதையடுத்து போலிசில் புகார் செய்யப்பட்டுள்ளது.