'வர்தா' புயலாலும் மழையாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சென்னை மெல்ல மெல்ல வழக்க நிலைக்குத் திரும்பி வருகிறது. 1994ஆம் ஆண்டிற்குப் பிறகு சென்னையைப் புயல் தாக்கியிருப் பது இதுவே முதல்முறை. நேற்று மாலையில் கரைகடந்த 'வர்தா' புயல் சென்னையிலும் அதை ஒட்டி அமைந்துள்ள காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்களிலும் பெரும் சேதத்தை விளைவித்தது. புயல் காரணமாக சென்னையில் நால்வர், காஞ்சிபுரத்திலும் திருவள்ளூரிலும் தலா இருவர், விழுப்புரம், நாகப்பட்டினத்தில் தலா ஒருவர் எனத் தமிழகத்தில் பத்துப் பேரும் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் இருவரும் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு மாநில அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா நான்கு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.
வர்தா புயல்: நான்கு லட்ச ரூபாய் இழப்பீடு - முதல்வர் பன்னீர் அறிவிப்பு
1 mins read
-

