எஸ்.குருமூர்த்தி: செல்லாத பணம் நடவடிக்கை பொக்ரானுக்குச் சமம்

எஸ்.குருமூர்த்தி: செல்லாத பணம் நடவடிக்கை பொக்ரானுக்குச் சமம்

1 mins read

புதுடெல்லி: ரூபாய் நோட்டை செல்லாமல் செய்த மத்திய அரசின் நடவடிக்கை பொக்ரானுக்குச் சமம் என்று ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார். பழைய ரூ. 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு அறிவித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை யால் நாட்டில் கடுமையான பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் நீண்ட வரிசையில் பணத்தை மாற்ற காத்து நிற்கின்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவி வந்தாலும் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். "ரூபாய் நோட்டை செல்லாமல் செய்த மத்திய அரசின் நடவடிக்கை பொக்ரானுக்குச் சமம். பொக்ரான் அணுகுண்டு சோதனையைத் தொடர்ந்து கற்பனை செய்யமுடியாத மாற்றம் நாட்டில் ஏற்பட்டது.