தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகளின் திருமணப் பரிசாக ஏழைகளுக்கு 90 வீடுகள்

1 mins read
6d71461b-1151-4af8-bcc2-53814bfb4079
-

அவுரங்காபாத்: மகளின் திரு மணத்தை முன்னிட்டு 90 ஏழை களுக்குத் தந்தை ஒருவர் வீடு கட்டிக் கொடுத்துள்ள சம்பவம் மக்கள் மனதில் நெகிழ்ச்சியை நிறைத்துள்ளது. மும்பையின் அவுரங்காபாத் தைச் சேர்ந்த தொழிலதிபர் மனோஜ் முனோத் தனது மகள் ஸ்ரேயாவின் திருமணத்தை முன்னிட்டு குடிசையில் வசித்து வந்த 90 ஏழைகளுக்குச் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார். அதேநேரம் தனது மகளின் திருமணத்திற்கு அவர் 70 முதல் 80 லட்சம் வரை மட்டுமே செலவு செய்திருக்கிறார். இதுகுறித்து அவரது மகள் ஸ்ரேயா கூறும்போது "இதனை எனது தந்தை கொடுத்த மிகப் பெரிய திருமணப் பரிசாகக் கருதுகிறேன்.

ஏழைகளின் ஆசீர் வாதமே எனக்கு மிகச்சிறந்த திருமணப் பரிசு," என்று தெரிவித் துள்ளார். "இந்த சமூகத்திற்கு ஏதாவது திருப்பிச் செய்யவேண்டும் என்ற பொறுப்பும் அக்கறையும் நமக்கு உள்ளது. நான் வீடு கட்டிக் கொடுத்துள்ளது ஒரு புது அத்தி யாயம். என்னைத் தொடர்ந்து பல பணக்காரர்களும் இந்நடவடிக்கை யில் ஈடுபடுவர் என்று எதிர்பார்க் கிறேன்," என்று மனோஜ் முனோத் கூறினார்.

ஸ்ரேயா தனது கணவருடன். படம்: ஊடகம்