ராகுல்: மோடியின் தனிப்பட்ட ஊழலை நிரூபிக்க என்னிடம் ஆதாரம் உள்ளது

ராகுல்: மோடியின் தனிப்பட்ட ஊழலை நிரூபிக்க என்னிடம் ஆதாரம் உள்ளது

1 mins read
62abc4ee-8f20-4925-9457-a2de2a6dbd1d
-

புதுடெல்லி: ஊழலில் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ஈடுபாடு குறித்து நிரூபிக்க என்னிடம் ஆதாரம் உள்ளது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். "நாங்கள் நாடாளுமன்றத்தில் எந்த ஒரு விவாதத்திலும் ஈடுபட தயாராகவே இருக்கிறோம். அரசாங்கம் என்னைப் பேச அனுமதிப்பதில்லை. "மோடியின் ஊழல் தொடர்பில் என்னிடம் தனிப்பட்ட தகவல்கள் உள்ளன. அவர் என்னைப் பார்த்து அஞ்சுகிறார்.

அவர் இந்த நாடாளுமன்றத்தை விட்டுத் தப்பி ஓடிவிட முடியாது. "நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு எதிராக அவர் முடிவு எடுத்துவிட்டார். அவர் நாட்டு மக்களுக்கு விளக்கம் சொல்ல கடமைப்பட்டுள்ளார்," என்று ராகுல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் (படம்: ஊடகம்). பிரதமர் மோடி குறித்த தனிப்பட்ட தகவல் ஒன்று தம்மிடம் உள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் பேச அனுமதித்தால் இந்தத் தகவலை வெளியிட்டு விடுவேன் என அரசுக்கு அச்சம் எனவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.