சசிகலா பதவியேற்க வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம்

சசிகலா பதவியேற்க வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம்

1 mins read
aa6d10f4-8bf1-4635-94d4-62795a2bc2b1
-

திருச்சி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானதையடுத்து, அதிமுகவின் பொதுச்செயலராக அவரது தோழி சசிகலா நடராஜன் பொறுப்பேற்க வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்காக திருச்சியில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் திருச்சி நகரில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு அதிமுகவைச் சேர்ந்த 25 பேர் உண்ணாவிரதம் தொடங்கி னர்.

அப்போது அச்சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சாகும்வரை தொடர் உண்ணா விரதம் இருக்கப்போவதாக அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்று குறிப்பிட்ட அவர்கள், இதை வலியுறுத்தி அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களைக் கையில் ஏந்தியபடி அமர்ந்திருந்தனர். மேலும், ஜெயலலிதா, சசிகலாவின் படங்களையும் வைத்திருந்தனர்.

சசிகலா நடராஜனை அதிமுகவின் பொதுச் செயலராகப் பதவியேற்க வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப்போவதாக அறிவித்த அதிமுகவினர். படம்: தகவல் ஊடகம்