நீடிக்கிறது ரூபாய் நோட்டுத் தட்டுப்பாடும் நீண்ட வரிசையும்

நீடிக்கிறது ரூபாய் நோட்டுத் தட்டுப்பாடும் நீண்ட வரிசையும்

1 mins read
c08a70ff-8ef5-442b-919f-97436711a63f
-

புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துவிட்டாலும், சென்னை உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இன்னும் ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் ஏடிஎம் மையங்களின் முன்பு நீண்ட வரிசைகளில் காத்துக் கிடப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இந்நிலையில் திரும்பப் பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளுக்கு ஈடாக குறைந்தளவு புதிய நோட்டுகள் மட்டுமே அச்சிடப்படும் என மத்திய நிதி அமைச்சர் அறிவித்திருப்பது பொது மக்களின் கவலையை அதிகப்படுத்தி உள்ளது. படம்: சதீஷ்