கோவை: கோவையில் உள்ள ஒரு 'ஏ.டி.எம்.'மில் ஒருவர் ரூ.2 ஆயிரம் எடுக்கச் சென்றார். அவருக்கு 'ஏ.டி.எம்.' இயந்திரத்திலிருந்து புதிய 2 ஆயிரம் நோட்டுகள் இரண்டு வந்தன. ரூ.4 ஆயிரம் பணம் ஒரே சமயத்தில் வந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அதுகுறித்து அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி வங்கி அதிகாரிகள் கூறும்போது, "சில 'ஏ.டி.எம்.'களில் பழைய 1,000 நோட்டுகளுக்கேற்ப கணினி கட்டமைப்பு செய்யப்பட்டிருப்பதால் இதுபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன. விரைவில் திருத்தி அமைக்கப்படும்," என்று கூறி அருகில் பாதுகாவலர் ஒருவரை நியமித்தார்.
'ஏ.டி.எம்.'மில் பரபரப்பு
1 mins read

