சென்னை: மக்கள் மத்தியில் விளம்பரம் தேடிக்கொள்ளவே காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நடிகை கவுதமி திடீரென பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாக தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சாடியுள் ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஒரு பெரிய கட்சித் தலைவரைப் பற்றி பேசுவதும் எழுதுவதும் விளம்பரம்தான் என்றார். "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை கவுதமி பார்த்ததில்லை. அப்படியிருக்க அவர் கடிதம் எழுதுகிறார் என்றால் அதற்கு விளம்பரம் தேடும் நோக்கமே காரணம்," என்றார் அமைச்சர் உதயகுமார்.
அதிமுக: விளம்பரம் தேடும் கவுதமி
1 mins read

