ஓபிஎஸ்=மலேசிய அமைச்சர் சந்திப்பு

ஓபிஎஸ்=மலேசிய அமைச்சர் சந்திப்பு

1 mins read

சென்னை: தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை மலேசிய நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சரும் மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியன் சந்தித்தார். தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு தமது இரங்கலைத் தெரிவித்தார். இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்தும் அவர் விசாரித்தறிந்தார்.