பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட இந்தியா - கிர்கிஸ்தான் இணக்கம்

பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட இந்தியா - கிர்கிஸ்தான் இணக்கம்

1 mins read
f47f2829-543e-4934-89a3-dead94ce897d
-

புதுடெல்லி: கிர்கிஸ்தானும் இந்தி யாவும் ஒன்றுக்கொன்று பலனடை யும் வகையில் முதலீட்டு ஒப் பந்தம் உள்ளிட்ட ஆறு ஒப்பந்தங்க ளில் கையெழுத் திட்டுள்ளன. அவற்றில் முக்கியமாகப் பயங்கர வாதத்திற்கு எதிராக ஒன்றி ணைந்து போராட இந்த இரு நாடுகளும் இணக்கம் கண் டுள்ளன. கிர்கிஸ்தான் அதிபர் அல்மாஸ்பெக் அதாம்பாயேவ் இந்தி யத் தலைநகர் புதுடெல்லிக்கு நான்கு நாட்கள் அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டு ஞாயிற்றுக் கிழமை இந்தியா வந்து சேர்ந்தார்.

நேற்று முன்தினம் அதிபர் மாளி கையில் அவருக்கு ராணுவ மரி யாதையுடன் வரவேற்பளிக்கப் பட்டது. அதன் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கிர்கிஸ்தான் அதிபர் அல்மாஸ் பெக்கும் இரு நாட்டு நல்லுறவு பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர். அதிபர் அல்மாஸ்பெக்குடன் அந்நாட்டு அமைச்சர்களும் உயர் மட்ட அதிகாரிகளும் உடன் வந் திருந்தனர். அவர்களுக்கு இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி, அதிபர் மாளிகையில் விருந்தளித் தார். இரு நாடுகளுக்கும் இடையே யுள்ள தற்காப்பு ஒத்து ழைப்பு, வர்த்தகம் போன்றவற்றை மேம்படுத்த இந்த பேச்சுவார்த்தை வழிவகுத்தது.

புதுடெல்லியில் கிர்கிஸ்தான் அதிபரையும் அவரைது மனைவியையும் வரவேற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படம்: ஏஎஃப்பி