'50 நாட்களில் பணப்பிரச்சினை தீராவிடில் பிரதமர் மோடி பதவி விலகுவாரா?'

'50 நாட்களில் பணப்பிரச்சினை தீராவிடில் பிரதமர் மோடி பதவி விலகுவாரா?'

1 mins read

புதுடெல்லி: நாட்டில் தலைவிரித்தாடும் பணப்பிரச்சினை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வைத்த கெடுவான 50 நாட்களுக்குள் தீராவிட்டால், அவர் பதவி விலகுவாரா என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கேள்வியெழுப்பி உள்ளனர். ராகுல்காந்தி, மம்தா உள்ளிட்டோர் கூட்டாக இணைந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது ராகுல் காந்தி கூறும்போது, "பண மதிப்பு நீக்க நடவடிக்கை என்னும் தன்னிச்சையான பொருளாதார பரி சோதனை முயற்சியை உலக வரலாற்றிலேயே முதல் முறையாக பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார்.

"மத்திய அரசின் இந்நடவடிக்கை, கறுப்புப்பணத்தின் மீது எந்தத் தாக்கத் தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக நாட்டு மக்களின் பொருளியல் சுதந்திரத்தைப் பறித்துவிட்டது. இந்தியாவின் ஒரு விழுக்காடு பெரும் பணக்காரர்களின் நலனுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் சாதாரண மக்களைக் கடும் துயரத்திற்கு ஆளாக்கிய பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்," என அவர் கேட்டுக் கொண்டார்.