விஜயவாடா: ராமர் கோயிலுக்கு ரூ.1.50 லட்சத்தில் வெள்ளிக் கிரீடத்தைக் காணிக்கையாக அளித்துள்ளார் பிச்சைக்கார பக்தர் ஒருவர். அந்தக் கிரீடத்தின் மதிப்பு ரூ.1.5 லட்சம். தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த யாடி ரெட்டி (75), என்பவர்தான் அந்தக் கிரீடத்தைக் கொடுத்த பிச்சைக்காரப் பக்தர். இவர் இளம் வயதில் பல வேலைகள் செய்து, இருசக்கர ரிக்ஷா இழுத்துப் பிழைப்பு நடத்தி வந்துள்ளார். முதுமை காரணமாக வேலைக்குச் செல்ல முடியாமல் கடந்த சில ஆண்டுகளாக விஜயவாடா நகரில் உள்ள ராமர் கோயில் முன்பு பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்தி வருகிறார். அவரின் தேவையைக் காட்டிலும் மிஞ்சிய பணத்தைப் பக்திப் பணிகளுக்குச் செலவு செய்யத் திட்டமிட்டு சேமித்துதான் இந்தக் காணிக்கையை செலுத்தியுள்ளதாகக் கூறினார்.
ராமர் கோயிலுக்கு வெள்ளிக் கிரீடம் காணிக்கை அளித்த பிச்சைக்காரர்!
1 mins read

