சீமான்: தடையை மீறி ஜல்லிக்கட்டு

சீமான்: தடையை மீறி ஜல்லிக்கட்டு

1 mins read
ba153922-525b-4cdb-a93e-d59b59cda6a2
-

மதுரை: ஜல்லிக்கட்டு காளைகளை வைத்து யாரும் சர்க்கஸ் நடத்தவில்லை என்றும், சர்க்கசில் காட்சிப்படுத்தப்படும் யானை, சிங்கம், ஒட்டகம் போன்ற விலங்குகளின் பட்டியலில் காளை களைச் சேர்த்தது கண்டனத்துக்குரியது என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். "கேரளாவில் யானை பந்தயம், ராஜஸ்தானில் ஒட்டக ஓட்டம் தற்போது வரை தடையின்றி நடக்கின்றன. காலப்போக்கில் தைப்பொங்கல் உள் ளிட்ட பாரம்பரிய திருவிழாக்களைக்கூட கொண்டாட முடியாத அவல நிலை ஏற்படும். இதைத் தவிர்க்க தடையை மீறி ஜல்லிக் கட்டை நடத்துவோம்," என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.