காவல் தெய்வமான சின்னம்மா: அதிமுக நிர்வாகிகள் புகழாரம்

சென்னை: சசிகலா நடராஜனை சின்னம்மா என்றும் அதிமுகவின் காவல் தெய்வம் என்றும் அதிமுக நிர்வாகிகள் குறிப்பிடுகின்றனர். அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நடராஜன் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள் ளது. இதை வரவேற்று 'சின்னம்மா வாழ்க' என அதிமுக நிர்வாகி களும் தொண்டர்களும் ஆரவார முழக்கங்கள் எழுப்பினர். பொதுக்குழு நடைபெற்ற திருமண மண்டபத்தின் வாயிலில் கூடியிருந்த நூற்றுக்கணக்கா னோர், சசிகலா தான் அடுத்த பொதுச்செயலாளர் என்பது உறுதி யானதும் கரவொலி எழுப்பியபடியே பட்டாசுகள் வெடித்தனர். ஒருவருக் கொருவர் இனிப்புகள் விநியோ கித்தும் மகிழ்ந்தனர்.

அதிமுக நிர்வாகிகளும் தீவிர தொண்டர்களும் வழக்கமாக தங்களது சட்டைப் பையில் ஜெயலலிதாவின் படத்தை வைத்திருப்பர். அதற்கு மாறாக நேற்று சசிகலாவின் படத்தை வைத்திருந்தனர். அதில் ஜெயலலிதாவின் முகம் மட்டும் ஓரத்தில் இடம்பெற்று இருந்தது. சசிகலா பொதுச் செயலாளர் என்று பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தி லும் பட்டாசு வெடித்து, அதிமுக தொண்டர்கள் உற்சாக ஆரவாரம் செய்தனர். தலைமை அலுவலகம் தொடங்கி பொதுக்குழு நடை பெற்ற திருமண மண்டபம் வரையில் வழியெங்கும் சசிகலாவை 'சின்னம்மா' எனக் குறிப்பிட்டு சுவரொட்டிகள் காணப்பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!