ஜெயலலிதா மர்ம மரணம்: நீதிபதியின் சந்தேகம்

ஜெயலலிதா மர்ம மரணம்: நீதிபதியின் சந்தேகம்

1 mins read

சென்னை: காலஞ்சென்ற முன் னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கூறியுள்ளார். பல்வேறு சந்தேகங்களுக்கு விடை தேடும் வகையில், ஜெய லலிதாவின் சடலத்தைத் தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் மரணம் தொடர்பாகப் பல் வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும் உண்மை நிலவரத்தை மக்க ளுக்குத் தெரிவிக்க வேண்டுமென வும் கோரி அதிமுக தொண்டர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்றை நேற்று நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகி யோர் அடங்கிய அமர்வு விசா ரித்தது. அப்போது அரசுத்தரப்பு வழக்கறிஞரைப் பார்த்து நீதிபதி வைத்தியநாதன் சரமாரிக் கேள்வி களை எழுப்பினார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக கேள்விகள் எழுப்ப அனைவருக்குமே உரிமை உள்ளது என்று குறிப்பிட்ட அவர், தனிப்பட்ட முறையில் தமக்கும் சந்தேகம் உள்ளது என்றார்.