சசிகலாவுக்கு பொன்.ராதா வாழ்த்து

சசிகலாவுக்கு பொன்.ராதா வாழ்த்து

1 mins read

சென்னை: அதிமுக பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ் ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர், அதனைத் தொடர்ந்து வழிநடத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச்செயலராக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள திருமதி சசிகலாவுக்கு தமது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக பொன்னார் குறிப்பிட்டுள்ளார்.