இயற்பியல் பாடம் படித்து பி.காம் பட்டம் பெற்றுள்ள எம்எல்ஏ

விஜயவாடா: ஆந்திர மாநிலம், விஜயவாடா மேற்குத் தொகுதி எம்எல்ஏ ஜலீல் கான். இவர் தெலுங்குத் தொலைக்காட்சி ஒளிவழி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பி.காம் பட்டப் படிப்பின்போது இயற்பியல் படித்ததாகக் கூறியுள்ளார். தற்போது இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவ, எம்எல்ஏ குறித்து கேலி, கிண்டலுடன் கருத்து பதிவிட்டு வருகின்றனர். பேட்டியின்போது எம்எல்ஏ தான் பி.காம் படித்ததாகக் கூறுகிறார். மேலும் தனக்குக் கணக்கிலும் இயற்பியலிலும் ஆர்வம் இருந்ததால் பிகாம் பட்டப்படிப்பை தேர்வு செய்து படித்ததாகக் கூறுகிறார். பி.காம் பட்டப் படிப்பில் இயற்பியல் பாடம் கிடையாதே என செய்தியாளர் கூற, ஜலீல் கானோ விடாப்படியாக பி.காம் படிப்பில் இயற்பியல் பாடம் படித்ததாக உறுதியாகக் கூறினார்.

செய்தியாளரிடம் 'பி.காமில் இயற் பியல் இல்லையென யார் சொன்னது? அக்கவுண்ட்ஸ்தான் இயற்பியல்... அக்கவுண்ட்ஸ் கணக்கு இல்லையா?' எனப் பதிலடி கொடுக்க செய்தியாளரோ அதிர்ச்சி அடைகிறார். அடுத்து எம்எல்ஏவின் பதில் இன்னும் அதிரடியாக இருந்தது. 'கணக்குப் பாடம் தனக்குச் சிறு வயது முதலே பிடித்த பாடம் என்கிறார். கணக்குத் தேர்வில் மட்டும் சதம் அடிக்காமல் விட்டதே இல்லை' என்கிறார். அதுவும் 'எந்தத் தேர்விலும் கணிப்பான் பயன்படுத்தியதில்லை' என்றும் கூறுகிறார். கோபமான செய்தியாளர் எம்எல்ஏவின் பேட்டியைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார். பேட்டியைப் பார்த்தவர்கள் விடுவார்களா? சமூக வலைத்தளங்களின் இப்போதைய தீனி இந்த எம்எல்ஏதான்.

பிரதமர் மோடி, ஸ்மிரிதி இராணியின் கல்வித் தகுதியைத் தொடர்ந்து இப்போது ஆந்திர எம்எல்ஏ ஜலீல்கான் சிக்கியுள்ளார். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!