மார்ச் 31 வரை வெளிநாட்டு இந்தியர்கள் பணத்தை மாற்றலாம்

புதுடெல்லி: மோடி அரசாங்கம் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8ஆம் தேதி திடீரென விடுத்த அறிவிப்பு இந்திய மக்களை மட்டுமின்றி, வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்களை யும் அதிர்ச்சியுடன் ஆச்சரியத் திலும் ஆழ்த்தியது. இந்த செல்லாத பணத்தை புதிய ரூபாய் நோட்டுகளாக இன்று டிசம்பர் 30ஆம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது. இந்தியாவுக்கு பயணம் மேற் கொள்பவர்கள் பணத்தை கையில் எடுத்து வந்து எந்தவொரு வங்கி யிலும் அஞ்சலகங்களிலும் பணத்தை மாற்றிக்கொள்ள வசதி இருந்தது. ஆனால் அப்படி பய ணம் மேற்கொள்ள முடியாதவர்கள், வரும் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கிகளில் பாஸ் போர்ட், விசா விவரங்களைக் காட்டி, நீங்கள் வெளிநாட்டிற்கு சென்றிருந்ததைக் கூறி பணத்தை மாற்றலாம்.

அப்படி பயணம் மேற்கொள்ள முடியாத சூழல் இருந்தால், மாற்ற வேண்டிய பணத்தை இந்தியா வுக்குச் செல்லும் உங்களுக்கு நம்பகமானவர்களிடம் கொடுத்து விட்டும் மாற்றலாம். அவர்கள் உங்களுக்காக இந்தப் பணத்தை மாற்றமுடியும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!