குழு: புயல் சேதம் தமிழக அரசு சொல்லும் அளவுக்கு இல்லை

குழு: புயல் சேதம் தமிழக அரசு சொல்லும் அளவுக்கு இல்லை

1 mins read

சென்னை: சென்னை நகரை அண்மையில் பதம்பார்த்த வர்தா புயல் காரணமாக ஏற்பட்ட சேதம், தமிழக அரசு சொல்வதைப்போல் அந்த அளவுக்கு இல்லை என்று இந்தியாவின் உள்துறை அமைச்சு அறிவித்துவிட்டது.

அந்தப் புயல் காரணமாக ரூபாய் 21,000 கோடி அளவுக்குச் சேதம் ஏற்பட்டுவிட்டதாக தமிழக அரசு அண்மையில் தெரிவித்து இருந்தது. ஆனால் அந்தப் பேரிடர் காரணமாக ஏற்பட்ட சொத்துகளுக் கும் அடிப்படை வசதிகளுக்கும் ஏற்பட்ட சேதம் தமிழக அரசு கூறும் அளவிற்கு மோசமாக இல்லை என்று உள்துறை அமைச்சுக் குழுவின் பூர்வாங்க மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.