சென்னை: விவசாயிகளுடைய பிரச்சினைகளுக்குத் தமிழக அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்தைக் கைவிட்டு விவசாயிகள் எந்த விதப் பிரச்சினைகளாக இருந் தாலும் அவற்றை எதிர்த்துப் போராட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் அல்லது வேளாண் அமைச்சர் உள்ளிட்ட யாரேனும் பாதிக்கப் பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென அறிக்கை ஒன் றின் வழி விஜயகாந்த் வலியு றுத்தி உள்ளார். விவசாயிகள் எதிர்கொள் ளும் பிரச்சினைகள் தொடர்பாக தமிழக அரசு எந்தவித நடவடிக் கையும் எடுக்கவில்லை எனக் கடுமையாக விமர்சித்துள்ள அவர், இனியாவது மாநில அரசு விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.